வெள்ளகோவிலில் பதுக்கி வைத்திருந்த 22 மது பாட்டில்கள் பறிமுதல்

வெள்ளகோவிலில் பதுக்கி வைத்திருந்த 22 மது பாட்டில்கள் பறிமுதல்
X
வெள்ளகோவிலில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்
வெள்ளகோவில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சந்திரன் மற்றும் போலீசார் காங்கயம் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இரட்டைக்கிணறு அரசு மதுபான கடை அருகில் மதுபானம் விற்றுக் கொண்டிருந்த கோவை நேதாஜிபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த பழனிகுமார் (வயது 43) என்பவர் பிடிப்பட்டார். அவரிடம் இருந்து 22 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.
Next Story