ஆசிரியர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை

ஆசிரியர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
X
மதுரை மேலூரில் ஆசிரியர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது
மதுரை மாவட்டம் மேலுார் அண்ணா காலனியில் வசிக்கும் மும்தாஜ் (56) என்பவர் கோட்டநத்தாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர் நேற்று (செப்.21) மதுரை சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கிரில், மரக்கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன், வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தன. இதுகுறித்து மேலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story