பேருந்து நிலையத்தில் 22 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

பேருந்து நிலையத்தில் 22 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
X
தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தில் 22 கிலோ கஞ்சாவுடன் இருந்த நெல்லை மாவட்டம் முனைச்சிப்பட்டி கீரன்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் செல்லத்துரை என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தில் 22 கிலோ கஞ்சாவுடன் இருந்த நெல்லை மாவட்டம் முனைச்சிப்பட்டி கீரன்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் செல்லத்துரை என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி நகர பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி,மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேகா,சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் உள்ளிட்டோர் தூத்துக்குடி ரயில் நிலையம்,பழைய,புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர், இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி கையில் பேக்குடன் நின்ற வாலிபரை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்ட போது அவரிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர், திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிபட்டி கீரன்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் செல்லத்துரை (25 ) என்பது தெரிய வந்தது அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜேம்ஸ் செல்லத்துரை தூத்துக்குடியைச் சேர்ந்த கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கு இந்த கஞ்சாவை கொண்டு வந்தாரா அந்த கும்பல் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story