ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த 22 லட்சத்த 50 ஆயிரம் மதிப்பிலான 45 கிலோ கஞ்சா பறிமுதல் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த 22 லட்சத்த 50 ஆயிரம் மதிப்பிலான 45 கிலோ கஞ்சா பறிமுதல் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நடவடிக்கை. ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் பகுதியிலிருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் நிகில் குமார் குப்தா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது ஜெனரல் கம்பார்ட்மெண்டில் கேட்பாரற்று கிடந்த இரண்டு ட்ராலி பேக் மற்றும் 3 டிராவல் பேக்கை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்ததில் அதில் 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 45 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காவல் நிலையம் எடுத்து சென்றனர் மேலும் இந்த கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது இந்த கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் யார்? கஞ்சா எங்கு கொண்டு செல்லப்படுகிறது என பல்வேறு கோணங்களில் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 45 கிலோ கஞ்சாவை சென்னை அம்பத்தூரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story



