தீரன் சின்னமலையின் 220 வது நினைவு தினம்

தீரன் சின்னமலையின் 220 வது நினைவு தினம்
X
தீரன் சின்னமலையின் 220 வது நினைவு தினம் அதிமுக சார்பில் மேலப்பாளையத்தில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பொள்ளாச்சி ஜெயராமன் 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேலப்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தீரன் சின்னமலையின் 220 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என். நடராஜ் தலைமையில் மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலையின் திருவருடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தீர்த்தகிரி என்ற இயற்பெயர் சின்னமலை என மாற்றம் அடைந்ததற்கு சில வரலாறுகள் கூறப்படுகின்றது. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த நேரம் மைசூர் அரசால் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப்பணத்தை கொண்டு சென்ற தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக சொல் என்று கூறினாராம். அன்றிலிருந்து தீர்த்தகிரி சின்னமலை என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது . அரச்சலூர் அருகே ஓடா நிலையில் கோட்டை கட்டி சின்னமலை பிரிட்டிஷார் எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க தொடங்கினார். சிலம்பம் வாள் வீச்சு என தன் கற்றுத் தேர்ந்த தற்காப்பு கலைகள் மூலம் தன்னையும் படைத்தளபதிகளையும் தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவாராம் சின்னமலை. 1802 ஆம் ஆண்டு நடந்த போரின் போது சின்னமலை அதிரடி சிலம்பாட்டம் குறித்து இன்றைக்கும் கொங்கு மண்டலத்தில் பேசுவதுண்டு. வீரத்தை சூழ்ச்சிகள் வீழ்த்துவது தானே வழக்கம் அது தான்  தீரன் சின்னமலையின் வாழ்க்கையிலும் நடந்தது. சின்ன மலையை சிக்க வைக்க திட்டமிட்டு ஆங்கிலேய அரசு அவரின் சமையல்காரர் மூலம் வலை விரித்து இறுதியாக அவரது சகோதரர்களுடன் கைது செய்யப்பட்டார் தீரன் சின்னமலை. எந்த சங்ககிரியில் தனது முதல் வேட்டையை  சின்னமலை தொடங்கினாரோ அதே சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட  தீரன் சின்னமலை. 1805 ஆம் ஆண்டு ஆடி 18ம் நாள் தூக்கிலிடப்பட்டார். பெரும்படையுடன் செல்வாக்குடன் வலம் வந்து ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையை கடைசி வரை நேரடியாக போரிட்டு வெல்ல முடியவில்லை என்பதை வீரத்தமிழரின் வரலாறு அந்த வரலாற்றை போற்றும் வகையில் அவருடைய நினைவை போற்றும் வகையிலும், சுதந்திரத்திற்காக போராடிய மாவீரனை போற்றும் வகையிலும் அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நினைவு நாளில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் ஒன்றிய செயலாளர் ஆன என். எஸ்.என். நடராஜ் தலைமையில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற துணை தலைவரும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் தீரன் சின்னமலையின் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தீரன் சின்னமலை அவர்கள் போருக்கு செல்லும் முன் வழிபடும் விநாயகர் கோவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார், வெள்ளகோவில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் , வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்,நகர செயலாளர் டீலக்ஸ் மணி, ஆகியோர் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கேயம்  ஒன்றிய,நகர அதிமுக கழக நிர்வாகிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது : அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைப்படி மேலப்பாளையம் கிராமத்தில் மாவீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வந்துள்ளதாகவும் தெரிவித்தார், பின்னர் அதேபோல அவருடைய நினைவு நாளிலே மீண்டும் எடப்பாடி தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை விரைவில் அமைக்க நாங்கள் அனைவரும் வீர சபதம் ஏற்போம். 2026 இல் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை வழங்குவோம் என்றார். அதேபோன்று தீரன் சின்னமலையின் பெயரில் அம்மா அவர்கள் தான் கரூரை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் அமைத்து கொடுத்தார்கள். அதேபோல தீரன் சின்னமலையின் பெயரில் போக்குவரத்து கழகம் அமைத்துக் கொடுத்ததும் அம்மா அவர்கள் தான். அதேபோல் கிண்டியில் தீரன் சின்னமலைக்கு உருவிய வாளுடன் மாபெரும் வீரமிக்க சிலையை அமைத்துக் கொடுத்தார்கள். தீரன் சின்னமலை உடைய மாவீரத்தையும் தியாகத்தையும் அவருடைய நினைவு நாளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போற்றி வணங்குகிறது என தெரிவித்தார்.
Next Story