ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்,அய்யூரில்,ஊரக நூலக அமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில்,புதி

X
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்,அய்யூரில்,ஊரக நூலக அமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில்,புதியதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை, சென்னையில் இருந்து மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் இரா.வேல்முருகன்,வட்டாட்சியர் இராஜமூர்த்தி,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாஹீர் உசேன்,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்,ஆண்டிமடம் வேளாண்மை அட்மா குழு தலைவர் க.தர்மதுரை மற்றும் அரசு அலுவலர்கள், நூலகர்கள்,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story

