முறையற்ற ரயில் பயணத்தால் ரூ 22.14 கோடி அபராதம்- சேலம் கோட்ட ரயில்வே PRO அறிவிப்பு

முறையற்ற ரயில் பயணத்தால் ரூ 22.14 கோடி அபராதம்- சேலம் கோட்ட ரயில்வே PRO அறிவிப்பு
முறையற்ற ரயில் பயணத்தால் ரூ 22.14 கோடி அபராதம்- சேலம் கோட்ட ரயில்வே PRO அறிவிப்பு ரயிலில்,டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ஒரு குற்றமாகும். கரூர் மாவட்டம் உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பயணிகளை . ரயில் நிலையங்களுக்குள் நுழைய / செல்லுபடியாகும் டிக்கெட்டுகளுடன் பயணிக்க ஊக்குவித்து வலியுறுத்துகிறது. சேலம் கோட்டம் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை நடத்தப்பட்ட டிக்கெட் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் ரூ.22,13,72,090/- கோடி அபராதமாக வசூலித்தது. சேலம் கோட்ட வரலாற்றில் டிக்கெட் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் ஒரு வருடத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வருவாய் இதுவாகும். சேலம் கோட்ட டிக்கெட் சரிபார்ப்புப் படையினர், ரயில்களிலும், ரயில் வளாகங்களிலும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, ​​டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள், ஒழுங்கற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத சாமான்கள் போன்றவற்றைக் கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர். சேலம் கோட்டத்தின் மூத்த கோட்ட வணிக மேலாளர் பூபதிராஜாவின் வழிகாட்டுதலால் இது சாத்தியமானது. ஏப்ரல்-2024 - மார்ச், 2025 வரை, சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழுக்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 1,64,149 குற்றவாளிகளிடமிருந்து ரூ.13,52,74,152/- அபராதம் வசூலித்தது. இதே காலகட்டத்தில் 1,65,115 முறைகேடான பயணம் கண்டறியப்பட்டு, பயணிகளிடமிருந்து ரூ.8,56,23,533/- அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், முன்பதிவு செய்யப்படாத சாமான்கள் / அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சாமான்களை எடுத்துச் சென்றதாக 833 வழக்குகள் பதிவு செய்து அபராதத் தொகை ரூ.4,74,405/- வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Next Story