லோக் அதாலத் 222 வழக்குகளுக்கு தீர்வு

X
திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதி சமரச மையத்தில் 222 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருக்கோவிலுார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி முகமது அலி தலைமை தாங்கினார்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீன் குமார், முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரேம்நாத் இரண்டாவது கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரசன்னா முன்னிலை வகித்தனர். முகாமில் மோட்டார் வாகன விபத்து, நிலம் பிரச்னை, வங்கிக் கடன், கல்விக் கடன் என 300க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், வாகன விபத்து, வங்கி வழக்குகள் உட்பட 222 வழக்குகளுக்கு, 94 லட்சத்து 60 ஆயிரத்து 592 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
Next Story

