மருது பாண்டியர்களின் 223 வது நினைவு நாள் ஆலோசனைக் கூட்டம்

மருது பாண்டியர்களின் 223 வது நினைவு நாள் ஆலோசனைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் 223 வது நினைவு நாளில் கடைபிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு தின விழா, காளையாா்கோவிலில் நினைவு நாள் ஆகிய நிகழ்வுகளின் போது, கடைபிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. அப்போது அவா்களின் உருவச் சிலைகளுக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள், பல்வேறு அமைப்புக்களை சோ்ந்த பிரமுகா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து உள்ளனர். அதேபோல, வருகிற 27-ஆம் தேதி காளையாா்கோவில் மருதுபாண்டியா்களின் நினைவு தினம் அனுசரிப்பு, வருகிற 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை ஆகிய நிகழ்வுகளுக்கு சிவகங்கை மாவட்டத்திலிருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி சென்று வர வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவா்கள் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று செல்லலாம். நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியாதவா்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் உரிய தகவல்களை கொடுத்து, அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசுப் பேருந்துகளை நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விதிமுறைகளை கடைபிடிக்காதவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பயணங்களின் போது வாகனங்களில் சாதி, மத உணா்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கட்டிச் செல்லவோ, முழக்கங்கள் எழுப்பவோ கூடாது. நடைப் பயணமாகச் சென்று மரியாதை செலுத்த அனுமதியில்லை. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், சமுதாய அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story