ஒரே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட 223 மக்கள்..

ஒரே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட 223 மக்கள்..
X
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைவிற்கும் நாள் கூட்டத்தில் தரப்பட்ட 223 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வி.மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 223 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story