ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.22,45,000 மோசடி

X

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.22,45,000 மோசடி செய்த வழக்கில் குஜராத் வாலிபர் கைது
திண்டுக்கல், நாகல்நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி வாட்ஸ் அப் மூலம் பயிற்சி அளித்து பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.22,45,000 பணத்தைப் பெற்றுக் கொண்டனர் அதன் பிறகு மனோகரன் அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் ADSP. தெய்வம் மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியா லூர்துமேரி, தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர் லாய்டுசிங் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட போது மோசடியில் ஈடுபட்ட நபர் குஜராத் மாநிலம் சூரத் கிஷோர்(29) என்பது தெரிய வந்ததை தொடர்ந்து சைபர் கிரைம் ஆய்வாளர் விக்டோரியாலூர்துமேரி தலைமையிலான போலீசார் குஜராத் சென்று மோசடி செய்த கிஷோரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.
Next Story