கரூர் மாவட்டத்தில் 2.25- லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்- செந்தில்நாதன் பேச்சு.
Karur King 24x7 |24 Aug 2024 11:18 AM GMT
கரூர் மாவட்டத்தில் 2.25- லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்- செந்தில்நாதன் பேச்சு.
கரூர் மாவட்டத்தில் 2.25- லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்- செந்தில்நாதன் பேச்சு. கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பயிலரங்க கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், சேலம் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் நாராயணன்,சேலம் கிழக்கு மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, மாநில மகளிர் அணி தலைவர் மீனா உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், கரூர் மாவட்டத்தில் 2 1/4 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும், ஒரு மண்டலத்தில் 10 முதல் 11 ஆயிரம் பேர் வரையிலும், ஒரு பூத்திற்க்கு சராசரியாக 200 பேர் வரையிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இதற்காக வரும் 25, 26, 27- ஆகிய நாட்களில் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
Next Story