பார்சல் சர்வீஸ் மூலம் 22.5 கிலோ குட்கா விற்பனைக்காக வாங்கி வந்த நபரை மடக்கிப்பிடித்த போடி நகர் காவல் துறையினர். இருவர் கைது.

கைது
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற நபர் போடி பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பழைய பேருந்து நிலையம் அருகாமையில் சந்தேகப்படும்படியாக பார்சல் உடன் சென்றதை கண்ட போடி நகர் காவல் துறையினர் அவரை வழிமறித்து சோதனை செய்த பொழுது, பார்சலில் 22.5 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து செல்வகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கூகுள் பே மூலம் கம்பத்தைச் சேர்ந்த அப்துல் சமது என்ற நபரிடம் பணம் அனுப்பி தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் பெங்களூரில் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கம்பத்தில் இருந்த அப்துல் சமதை கைது செய்து போடி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். குட்கா கொண்டு வந்த பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் தற்போது தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story