தென்காசியில் 2,272 பேருக்கு ரூ.80.89 கோடி கடனுதவி வழங்கினர்
Sankarankoil King 24x7 |22 Dec 2024 1:47 AM GMT
தென்காசியில் 2,272 பேருக்கு ரூ.80.89 கோடி கடனுதவி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் தென்காசி மாவட்ட அனைத்து வங்கி கிளைகளின் மூலம் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் முகாம் மற்றும் கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் இலக்காக ரூ.1,809.86 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மூலப்பொருள்களின் வளம், உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளா்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோருக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. வங்கிகளின் மூலம் நேரடியாகவும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத்திட்டங்களின் வாயிலாகவும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்குவதற்கு வங்கிகளின் மூலம் 2,272 பேருக்கு ரூ.80.89 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நிகழாண்டில் 10, 12ஆவது வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயா்கல்வி பயில்வதற்காக கல்விக் கடன் பெறுவது குறித்து பள்ளிகளில் ஆலோசனை வழங்கப்பட்டது.
Next Story