திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.2.28 லட்சம் பறிமுதல்
Villuppuram King 24x7 |24 Aug 2024 12:54 AM GMT
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.2.28 லட்சம் பறிமுதல்
திண்டிவனம், சந்தமேட்டில், உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் (1)ல் பத்திர பதிவுகளுக்கு லஞ்சம் பெறுவதாக வந்த புகார் நிலவியது.இந்நிலையில் நேற்று மாலை 3:30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., வேல்முருகன் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து, அலுவலக கதவுகளை மூடினர்.உடன் அலுவலகத்தின் உள்ளே இருந்த பலர், கையில் வைத்திருந்த பணத்தை ஜன்னல் வழியாக வீசினர்.அதில், பெண் ஒருவர் வீசிய பேக்கில் 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து போலீசார், அலுவலகத்தில் இருந்தவர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து, அலவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் விசாரணைக்கு பின் திருப்பி கொடுத்தனர்.ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 28 ஆயிரத்து 760 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக சார் பதிவாளர் ரமேஷிடம் விசாரித்துவிட்டு இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.இச்சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
Next Story