ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ 2.29 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கிராமங்களில் திட்ட தொடங்கி வைத்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ.

X
அரியலூர், மே.31- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஆண்டிமடம் ஒன்றியத்தில்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் : 2025 - 2026, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் : 2025 -2026,சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டம் : 2024 - 2025 ஆகிய திட்டங்களின் கீழ், .புதுக்குடி ஊராட்சியில் ரூ 45.33 இலட்சம்,வாரியங்காவல் ஊராட்சியில் ரூ38.26 இலட்சம், மருதூர் ஊராட்சியில் ரூ 29.27 இலட்சம், குவாகம் ஊராட்சியில் ரூ 57.61 இலட்சம், காட்டாத்தூர் ஊராட்சி ரூ 10.38 இலட்சம், அணிக்குதிச்சான் ஊராட்சி ரூ36.39 இலட்சம் மேலூர் ஊராட்சியில் ரூ 10.90 இலட்சம், கூடுதல் 2.29 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் (வ.ஊ), அன்புச்செல்வன் (கி.ஊ),மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்துமதி, உமாதேவி,பொறியாளர் ராஜா சிதம்பரம், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கலியபெருமாள், ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தர்மதுரை மற்றும் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

