கைதான 23 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
Kallakurichi King 24x7 |3 Jan 2025 3:56 AM GMT
நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் 24 பேரை கைது செய்தனர். இதில் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. கண்ணுகுட்டி (எ)கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதிரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, தெய்வீகன், வேலு உள்ளிட்ட 23 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. அதை தொடர்ந்து, கடலுார் மத்திய சிறையில் உள்ள 23 பேரையும் காணொலி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவி யல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். 23 பேரின் நீதிமன்ற காவலை, வரும் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story