தீ விபத்தில் வீடு இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்க பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகன் பாண்டுரங்கன் தலைமையில் நிதி உதவிகளை வழங்கினர்

X
விருதுநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களுக்க பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகன் பாண்டுரங்கன் தலைமையில் நிதி உதவிகளை வழங்கினர்... விருதுநகர் மேலத் தெருவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாலையில் ராஜா என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீவபத்தில் அவரது வீடும் எரிந்து சாம்பலாகின. மேலும் அருகிலுள்ள 22 வீடுகளுக்கும் தீ பரவி மொத்தம் 23 வீடுகளும் தீயில் கருகி எறிந்து நாசமாகின. இதில் பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களை பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகன் ஜி.பாண்டுரங்கன் தலைமையில் அவர்களை நேரில் சந்தித்து தலா ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ 5000 நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்
Next Story

