கோவை கலெக்டர் அலுவலகத்தில் அமைப்புசாரா நலவாரிய சிறப்பு முகாம்- மே 23-ல் இணையதள தொழிலாளர்கள் பதிவு செய்யலாம் !

X
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகிற மே 23-ம் தேதி அன்று, இணையம் சார்ந்த தொழிலாளர்கள் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் அரங்கில் நடைபெறும் என்று இன்று கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியம், 18 வகையான தொழிலாளர் நல வாரியங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்று வருகின்றனர். இந்த சிறப்பு முகாம், இணையம் சார்ந்த தொழிலாளர்கள் அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, அதன் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
Next Story

