கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 23 பயனாளிகளுக்கு பணி ஆணை

6 மாத காலத்திற்குள் வீடு கட்டும் பணியை முடிக்க அறிவுறுத்தல்
கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் திருக்குவளை சமுதாய கூடத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்வி வளர்ச்சி அறக்கட்டளை குழு தலைவர் சோ.பா.மலர்வண்ணன் கலந்து கொண்டு 23 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா அருணகிரி, ஊராட்சி செயலர் எஸ்.ஆரோக்கியமேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பணி ஆணை பெற்ற பயனாளிகள், 6 மாத காலத்திற்குள் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
Next Story