காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.23 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல் 10; கோசாலை உண்டியல் 1, என, மொத்தம் 11 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், சரக ஆய்வாளர் அலமேலு, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள், தன்னார்வலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் வாயிலாக எண்ணப்பட்டது. இதில், மொத்தம், 23 லட்சத்து 14,498 ரூபாய் ரொக்கமும், 7 கிராம் தங்கமும், 178 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் அலமேலு தெரிவித்துள்ளார்.
Next Story

