திருச்செங்கோட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக ரூ 23 கோடி செலவில் புதிய மருத்துவமனை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

X
Tiruchengode King 24x7 |5 Nov 2025 7:22 PM ISTதிருச்செங்கோட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரை தளத்துடன் 5 அடுக்குகள் கொண்ட ரூ 23 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்டிடம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருச்செங்கோட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
மருத்துவமனை கட்டிடம் மட்டும் பிரம்மாண்டமாக அமைத்து விடாமல்மக்கள் வசதிக்காக கூடுதலாக ஏழு மருத்துவர்கள் நியமிக்கவும் அனுமதி கோரப் பட்டுள்ளது. தமிழகத்தில் உயர்தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு 25 இடங்களில் அமைக்கப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள் படிப்படியாக திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருகின்றன கொண்டுவரப்படுகின்றன என்றும், நாமக்கல் அரசு சித்த மருத்துவமனை மனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சித்த மருத்துவ கல்லூரியும் கொண்டு வரப்படும் என்றும், மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகத்தில் (05.11.2025) 23 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 4 தளங்கள் கொண்ட கூடுதல் படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட, திருச்செங்கோடு புதிய அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார். இதன் காணொளிக் காட்சி திருச்செங்கோடு அரசினர் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அத்துறைக்கான அமைச்சர் மா. சுப்பிரமணியன் , செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: - தமிழ்நாடு முதலமைச்சர், திருச்செங்கோடு புதிய மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். ரூ. 23 கோடி செலவில், 65 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட தரைத்தளம், 4 தளத்துடன் சேவைகளை வழங்கும். ஏற்கனவே, 160 படுக்கைகள் கொண்டு இயங்கி வந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இந்ததொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். அதன்படி இன்று புதிய கட்டிடம் 225 படுக்கை வசதியுடன் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இம்மருத்துவமனையில், ஏற்கனவே 2 கோடி 33 இலட்சம் மதிப்பில் CT SCAN மற்றும் சியாம் கருவிகள் திறந்து வைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட CT SCAN பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1 கோடி ரூபாய் மதிப்பில், பொது சுகாதார ஆய்வு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறுகின்ற கழிவு நீர் சுத்திகரிக்கப்பட 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்படும். இம்மருத்துவமனையில் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டம் உள்பட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இணையான மருத்துவமனைகள் திருத்தணி, தாம்பரம், பழனி, திருப்பத்தூர், காங்கேயம், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், பரமக்குடி உள்பட 25 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,019 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. படிப்படியாக மாவட்ட அரசு மருத்துவமனைகள் திறக்கப்படும். ஏற்கனவே திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, தேசிய தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. பிரசவங்களுக்கான லக்ஷயா விருதும் கிடைத்துள்ளது. நாமக்கல் மாநகரில் 2.11.2025 அன்று திறக்கப்பட்டுள்ள அரசு சித்த மருத்துவமனையில், ஒன்றரை ஆண்டுகால பயன்பாட்டிற்கு பிறகு, சித்த மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, ஏற்கனவே, திருச்செங்கோடில், வட்டார மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது என்றும்நன்றி கூடுதலாக ஏழு மருத்துவர்கள் நியமிக்க அனுமதி கூறப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து பணியிடங்களும் முழுமையாக உள்ளது எனவும் கட்டிடத்தின் வசதிக்கு ஏற்ப தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்,நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S. மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன், மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி, நகர மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு,கிழக்கு நகர திமுக செயலாளர்நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்,மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைச்செல்வன் எலச்சிபாளையம் ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் தீரன் சங்க பேரவை மாநில செயலாளர் கொங்கு கோமகன் திருச்செங்கோடு நகர செயலாளர் அசோக் குமார் சேன்யோ குமார்,தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார்,மற்றும் திருச்செங்கோடு நகராட்சியின் ஆணையாளர் வாசுதேவன்,திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மோகன பானு மருத்துவர்கள் செந்தில் அருள்,மற்றும்நகர் மன்ற உறுப்பினர்கள் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறையினர், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் பொது மக்களுக்கு எஸ் ஐ ஆர் வாக்காளர் படிவம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கஉதவிக்கான அலுவலகம் திறக்கப்பட்டது இதனை அமைச்சர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார் தொடர்ந்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்கூறியதாவது கோவையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டிக்கிறேன். உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்ற காவல்துறைக்கு பாராட்டுக்கள். இரவு 11 மணிக்கு விமான நிலையத்தின் பின்புறம் ஒரு ஆணும் பெண்ணும் ஏன் இருந்தார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. அதன் அடிப்படை காரணம் சமூக சீரழிவு தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சியில் அடங்கியதல்ல. தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும், செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட வளர்ச்சிகள் மட்டுமல்ல. கட்டிடங்களும், சாலைகளும் மட்டுமல்ல. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற திட்டங்கள் மட்டுமல்ல. எவ்வளவு பொருளாதார வளர்ச்சிகள் வந்தாலும் நாட்டு மக்கள் கட்டுப்பாடுகளோடு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாமல் சமூக சீரழிவுக்கு தொடர்ந்து வித்திட்டால் குற்றங்கள் பெருகி நாட்டையே அழிக்கும். பள்ளி படிப்பும், கல்லூரி பட்டங்களும் மட்டுமே முதலீடுகள் அல்ல. ஒழுக்கமும், பண்பாடுகளும் நிறைந்த ஒரு தலைமுறையை உருவாக்குவது தான் உண்மையான முதலீடு. தனிமனித உரிமை என்ற பெயரில் சீர்கேடுகளை கட்டவிழ்த்து விட்டதுதான் இது போன்ற குற்றங்களுக்கு அடிப்படை காரணம். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எப்போது என்ன நடக்கும் என்பதையோ, சாதி மதங்களுக்கிடையே எப்போது என்ன நடக்கும் என்பதையோ, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே எப்போது வன்முறை நடக்கும் என்பதையோ, ஒரு திருட்டு எப்போது நடக்கும் என்பதையோ கடவுள் தான் கணிக்க முடியுமே தவிர காவல்துறையோ ஒரு அரசாங்கமோ கணிக்க முடியாது. தகவல் தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் சமுதாய பிரச்சனைகளை முன்கூட்டியே அறியக்கூடிய வசதிகள் உலகம் முழுவதும் எங்குமே கிடையாது. ஒரு குற்றம் நடைபெற்ற பின்னால் அதை கண்டுபிடித்து தண்டனை வழங்க கூடிய அளவிலே தான் காவல்துறையோ மற்ற உளவு அமைப்புகளோ செயல்பட வாய்ப்பிருக்கிறது. குற்றமே நடக்காமல் தடுக்கப்பட வேண்டுமென்றால் அது குழந்தைகளை வளர்க்கின்ற பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது. பாடம் சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளுடைய அவசியத்தை எல்லோரும் உணர வேண்டும்.என கூறினார்
Next Story
