திருவாரூர் மாவட்டத்தில் 23 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்

X
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் 61 மையங்களில் 23 ஆயிரத்து 980 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக திருவாரூர் ஜி ஆர் எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,திருவிக அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான மையங்களில் காலை முதல் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுத வருகை தந்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . குறிப்பாக திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் 23 மையங்களும் நீடாமங்கலத்தில் 18 மையங்களும் மன்னார்குடி 22 மையங்களும் திருத்துறைப்பூண்டி 15 முத்துப்பேட்டை நான்கு மையங்கள் என 61 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story

