இலவச இருதயம் மற்றும் நுரையீரல் மருத்துவ ஆலோசனை முகாம் 230 நபர்களுக்கு பரிசோதனை

இலவச இருதயம் மற்றும் நுரையீரல் மருத்துவ ஆலோசனை முகாம் 230 நபர்களுக்கு பரிசோதனை
X
இலவச இருதயம் மற்றும் நுரையீரல் மருத்துவ ஆலோசனை முகாம் 230 நபர்களுக்கு பரிசோதனை
இலவச இருதயம் மற்றும் நுரையீரல் மருத்துவ ஆலோசனை முகாம் 230 நபர்களுக்கு பரிசோதனை தாராபுரம் நகர அரிமா சங்கம் ,கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மற்றும் விவேக் ரியல் எஸ்டேட் இணைந்து நடத்தும் இலவச இருதயம் மற்றும் நுரையீரல் மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று உடுமலை சாலையில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி தலைமையில் நடைபெற்றது. மேலும் மாவட்டத் தலைவர்கள் கே.கோபாலகிருஷ்ணன்,பி. செந்தில்குமார், எஸ். சண்முகவேல்,எஸ். பழனிச்சாமி மற்றும் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவர் ஸ்ரீசிவாசன் மற்றும் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை மருத்துவர் விஜய ரவிந்த் ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் இம் முகாமில் இதய நோய் சம்பந்தமாக 120 நபர்களுக்கும் நுரையீரல் சம்பந்தமாக 110 நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமிற்கான சிறப்பு ஏற்பாடுகளை தலைவர் டி.எஸ்.சிவக்குமார், செயலர் ஏ.முகமது அப்துல் காதர், செயலர் கே.கே.சீனிவாசன், பொருளர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் கந்தசாமி,பாலசுப்பிரமணி,வீர வெள்ளைச்சாமி,செந்தில்குமார், பசுபதி, நகர அரிமாக்கள் மற்றும் பொதுமக்கள் இந்முகாமில் கலந்து கொண்டனர்.
Next Story