காங்கேயம் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு மத்திய அரசு 230 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு நிர்வாகித்து வரும் பணிகளில் கட்டப்படும் பாலங்கள் தவறுதலாக உள்ளதாக குற்றச்சாட்டு
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தேசிய நெடுஞ்சாலை பணிக்கு 230 கோடி ஒதுக்கிய மத்திய அரசு அந்தப் பணியை மாநில அரசு நிர்வாகத்தில் பாலங்கள் கட்டப்படுவதாகவும் பாலங்கள் தவறுதலாகவும் சாலையை கடக்கும் கால்வாய்கள் தவறுதலாக பாலங்கள் கட்டியதாக விவசாயிகள் குற்றச்சாட்டு அதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு
கோயம்புத்தூர் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை விரிவாக்க பணிக்காக மத்திய அரசு 230 கோடி நிதி ஒதுக்கியதாகவும் அந்தப் பணியை மாநில அரசு நிர்வாகத்தில் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் காங்கேயம் எல்லையான சம்பந்தம் பாளையம் முதல் குறுக்கத்தி வரை சாலையின் இரு புறமும் அகலப்படுத்தப்பட்டு பி ஏ பி வாய்க்கால் நீ செல்லும் வழித்தடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக பாலங்கள் கட்டப்பட்டது அப்படி கட்டப்பட்ட பாலங்கள் தவறுதலான கட்டுமானங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இழந்து வந்தது மேலும் கட்டிய பாலங்கள் அனைத்துமே தரம் இல்லாமலும் இப்பொழுது வெடிப்புகள் விடப்பட்டும் உள்ளதாக விவசாயிகள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நல்ல முறையில் பழைய வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்ட சிறிய வழித்தடங்களை புதிதாக பெரிய பாலங்களாக கட்டி தண்ணீர் செல்ல முடியாத வகையில் கட்டப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் துயரத்துக்கு ஆளாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர் புகழை எடுத்து ஏற்கனவே இரண்டு முறை இந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் அந்த ஆய்வில் திருப்தி அடைய விவசாயிகள் மீண்டும் புகார் மனு அனுப்பியுள்ளனர். இதை அடுத்து மூன்றாவது முறையாக 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வந்து ஆய்வு செய்தனர் பாலங்கள் கட்டுமானம் மட்டுமின்றி சாலைகள் பிரியும் இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டதில் அனைத்து பகுதிகளும் குறையுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதை எடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை சீர் செய்வதாக அதிகாரிகள் உறுதி கொடுத்து பின்னர் கலைந்து சென்றனர்.
Next Story




