கரூரில் 23.20-mm மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூரில் 23.20-mm மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூரில் 23.20-mm மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தென் மாவட்ட பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று மாலை மற்றும் இரவு கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெய்த மழை அளவு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கரூரில் 5.20 மில்லி மீட்டர் குளித்தலையில் 2.00 மில்லி மீட்டர் மாயனூரில் அதிகபட்சமாக 16.00 மில்லி மீட்டர் என மொத்தம் 23.20 மில்லி மீட்டர் மழை அளவு .பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 1.93 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story