இருநூறு அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி: அமைச்சர்
வருகின்ற தேர்தலில் இருநூறு அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவிற்கு நாம் பாடுபட வேண்டும் என திமுகவில் உள்ள சமூக வலைதள பயிற்சி பட்டறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து இதனை தெரிவித்தார். திமுக இளைஞரணி சார்பில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாக முகவர்களுக்கு சமூக வலைதள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பாகம் முகவரிக்கான சமூக வலைதள பயிற்சி முகாம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது இந்த சமூக வலைதள பயிற்சி முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தற்போது சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறுகளை எதிர்க்கட்சியினர் பரப்பும்போது அவர்களுக்கு சரியான பதில் நாம் அளிக்க வேண்டும் மேலும் இந்த தேர்தலில் ஆதிக்க சக்தி இடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் மேலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை தீட்டி வருபவர் தான் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை யாரும் குற்ற சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
Next Story




