கோவை: 234 -ம் சிக்ஸர் தான் - தவெக போஸ்டரால் பரபரப்பு !

கோவை:  234 -ம் சிக்ஸர் தான் - தவெக போஸ்டரால் பரபரப்பு !
X
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி 234 - ஐ முன்னிறுத்தி போஸ்டர் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி 234 - ஐ முன்னிறுத்தி போஸ்டர் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 19 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் வெளியான சச்சின் திரைப்பட போஸ்டருடன், நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களில், நடிகர் விஜய்யின் படங்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும், சச்சின் களத்தில் 234 - ம் சிக்ஸர் தான் போன்ற வாசகங்களும் போஸ்டரில் காணப்படுகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி 234 - ஐ குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story