போக்குவரத்து விதி மீறல்: 24 பேர் மீது வழக்கு

X
சங்கராபுரத்தில் நடந்த வாகன சோதனையின் போது, போக்குவரத்து விதி மீறிய 24 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில், இரு சக்கர வாகனத்தில் ெஹல்மெட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, பதிவு எண் இல்லாமல் சென்றது, வேகமாக ஓட்டியது, மூன்று பேர் அமர்ந்து ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
Next Story

