கரூரில் சிஐஐ அமைப்பின் சார்பில் நவம்பர் 24 இல் மாரத்தான்

கரூரில் சிஐஐ அமைப்பின் சார்பில் நவம்பர் 24 இல் மாரத்தான்
கரூரில் சிஐஐ அமைப்பின் சார்பில் நவம்பர் 24 இல் மாரத்தான் & வாக்கத்தான் போட்டி. எம் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் பேட்டி. இந்திய தொழில் கூட்டமைப்பான சி ஐ ஐ சார்பில், கரூர் மாவட்டத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் 50- கோடி வர்த்தக இலக்கை அடைவதற்கான மாபெரும் உயர்தர கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சிஐஐ இன் விஷன் 2030 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டினை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சி ஐ ஐ, யங் இந்தியா கரூர், சேம்பர் ஆப் காமர்ஸ், எக்ஸ்போட்டர்ஸ் மற்றும் அனைத்து வணிக சங்கங்களையும், சமூக அமைப்புகள் என 80-க்கும் மேற்பட்ட அமைப்புகளோடு மாவட்ட நிர்வாகத்தையும் ஒன்றிணைத்து மாரத்தான் மற்றும் வாக்கத் தான் போட்டி நவம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கரூர் திருவள்ளூர் மைதானத்தில் காலை 6:00 மணிக்கு தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று சிஐஐ அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார் யங் இந்தியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன். அப்போது,இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளதாகவும், 5- கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் போட்டிகளும், குழந்தைகளுக்கு 5- கிலோமீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெறும் எனவும், இந்த போட்டியில் சுமார் 4000 பேர் கலந்து கொள்கின்றனர் எனவும், இதேபோல வாக்கத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். போட்டியை நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது சி ஐ ஐ மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, மாவட்டத் துணைத் தலைவர் பிரபு, யங் இந்தியா மாவட்ட துணை தலைவர் யோகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story