ஆதிமூல கணபதி மற்றும் ஆதிகாளியம்மன் கோவிலில் 24 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்...*

ஆதிமூல கணபதி மற்றும் ஆதிகாளியம்மன் கோவிலில் 24 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்...*
X
ஆதிமூல கணபதி மற்றும் ஆதிகாளியம்மன் கோவிலில் 24 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்...*
விருதுநகர் ஏடிபிடி காம்பவுண்டில் அமைந்துள்ள ஆதிமூல கணபதி மற்றும் ஆதிகாளியம்மன் கோவிலில் 24 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்... விருதுநகர் ஏடிபி காம்பவுண்டில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதிமூல கணபதி, ஸ்ரீஆதி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 24வது அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோவில் விழா கமிட்டி சார்பாக முக்கிய நிர்வாகிகளால் புனித நீர் ஏ.டி.பி. காம்பவுண்டு, எஸ்.எஸ்.எஸ்.மாணிக்கம் நகர் பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புரோகிதர்கள் மந்திரம் முழங்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஆதிகாளியம்மன் கோவில் மேல் கருடன் வட்டமிட கலசத்தில் புரோகிதர்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேஹம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பின்பு இந்த கும்பாபிஷேஹ விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேஹம் மற்றும் ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு காட்சியளித்தார். 7வது வார்டு கவுன்சிலர் மதியழகனுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றுச் சென்றனர் இறுதியாக பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது விழாக்கமிட்டியினர் இதற்கான ஏற்பாட்டினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
Next Story