சிபிஐ (எம்) 24 வது அகில இந்திய மாநாடு பெரம்பலூர் மாவட்ட வரவேற்புக் குழு அமைப்புக் குழு கூட்டம்.
சிபிஐ (எம்) 24 வது அகில இந்திய மாநாடு பெரம்பலூர் மாவட்ட வரவேற்புக் குழு அமைப்புக் குழு கூட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் 24 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் சாமி.நடராஜன் கலந்து கொண்டு மாநாடு நடைபெறுவது குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பெரம்பலூர் நகர செயலாளர் இன்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, செல்லமுத்து,பாஸ்கரன், சக்திவேல் ,மின்னரங்கம் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். செல்லத்துரை எஸ். அகஸ்டின், கலையரசி, ரங்கநாதன், ஏ.கே. ராஜேந்திரன், டாக்டர் சி. கருணாகரன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். கருணாநிதி, கோகுல கிருஷ்ணன், மகேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் இரா.எட்வின்,ஆர். ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






