கே எஸ் ஆர் பொறியியல் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு விழா

கே எஸ் ஆர் பொறியியல் கல்லூரியின் 24 ஆம் ஆண்டு விழா
திருச்செங்கோடு கே.எஸ். ஆர் பொறியியல் கல்லூரியில் 24 வது ஆண்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினார். மாணவர் ஆதித்யா வரவேற்புரை வாசித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் அவர்கள் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர் பற்றிய முன்னுரையை மாணவி ஜானகி வாசித்தார். விழாவில் டிசிஎஸ்ன் கல்வி சார்ந்த கூட்டமைப்பின் மண்டல தலைமை அதிகாரி கணேஷ் திருநாவுக்கரசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் வளரும் இன்றைய காலத்தில் ஒவ்வொரு தொழில்நுட்பமும் மிக குறுகிய காலத்தில் மாற்றத்தை சந்திக்கிறது எனவே மாணவர்கள் தங்கள் வாழ்க்கை முழுதும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் இதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஊக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் தரவரிசை பெற்ற மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆண்டு விழா விருந்தினர்களாக விஜய் டிவி புகழ் நடிகை மணிமேகலை, நடிகர் நவீன் முரளிதர் மற்றும் டி ஜே யாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர்.மோகன் அவர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிறைவாக மாணவி கன்யா நன்றியுரை வழங்கினார்.
Next Story