கோவை: குட்கா விற்ற இருவர் கைது, 24 கிலோ பறிமுதல் !

X
கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இருவரை தொண்டாமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேக கவுண்டன் பாளையம் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், மளிகைக் கடை நடத்தி வந்த ஜெயபிரகாஷ் என்பவரது கடையில் இருந்து 24 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ஜெயபிரகாஷ், அவரது மனைவி ஜெயசுந்தரி மற்றும் ஓட்டுநர் சத்ய பிரகாஷ் ஆகியோர் இணைந்து இப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயபிரகாஷையும், சத்ய பிரகாஷையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெயசுந்தரியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

