பேருந்து நிலையத்தில் 24 கடைகளை இடிக்க நோட்டீஸ்

X
திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியிலுள்ள 24 கடைகளை இடிப்பதற்கான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு விநியோகிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. A பகுதியில் 12 கடைகள், B பகுதியில் 12 கடைகள் மொத்தம் 24 கடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நடைபாதைகளின் மேற்கூரைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் புதிய நவீன வணிக வளாகம் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதால் கடைகளை காலி செய்து 30 நாட்களுக்குள் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

