கோவை: 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மார்க் பார்கள் !

கோவை:  24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மார்க் பார்கள் !
X
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல டாஸ்மார்க் பார்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், காலையிலேயே மது அருந்தும் பொதுமக்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல டாஸ்மார்க் பார்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், காலையிலேயே மது அருந்தும் பொதுமக்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதே நேரத்தில், மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதில் கதிரவன் நாடகக் குழு எமதர்மன் மற்றும் சித்திரகுப்தனை கொண்டு உருவாக்கிய கலை நிகழ்ச்சி மூலம் கள்ளச்சாராயத்தின் பாதிப்புகள் மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். ஆனால் அதே நேரத்தில் செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மது விற்பனை நடைபெறும் வீடியோக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சலசலபை ஏற்படுத்தியுள்ளது.
Next Story