பழையகுற்றால அருவியில் குளிக்க 24 மணிநேர அனுமதி தேவை

பழையகுற்றால அருவியில் குளிக்க 24 மணிநேர அனுமதி தேவை
X
அருவியில் குளிக்க 24 மணிநேர அனுமதி தேவை
தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கக் கோரி பல்வேறு சங்க நிா்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். தென்காசி மாவட்டம் குற்றாலம் வா்த்தக சங்கம், தங்கும் விடுதி உரிமையாளா்கள் நலச்சங்கம், விடுதி குத்தகைதாரா்கள் நலச்சங்கம், சிறு-குறு வியாபாரிகள் நலச்சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்கம், ஆட்டோ,காா், வேன் உரிமையாளா்கள் நலச்சங்க நிா்வாகிகள், ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோரிடம் அளித்த மனு: குற்றாலத்தில் ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். இந்த சீசனின் போது குற்றாலம் வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் தான் குற்றாலம்,மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் ஆகும். இங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் கிடையாது. அருவிகளை மட்டும் நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏரளமானோா் வாழ்க்கை நடத்தி வருகின்றனா். படித்த இளைஞா்கள் இந்த சீசன் காலகட்டத்தில் சிறு வியாபாரங்கள் செய்து வருகின்றனா். எனவே, பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
Next Story