காத்திருப்பு போராட்டத்திற்காக வருகை தந்த மக்கள் நல பணியாளர்கள் 24 பேர் கைது

19.08.14 சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியின் படி மக்கள் நல பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இறந்த மக்கள் நலபணியாளர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் மேலும் குடும்ப வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி இன்று 02.07.25 திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டம் அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களிலிருந்து ரயில் மூலம் இன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தற்கு வருகை தந்த பெண்கள் உட்பட மக்கள் நல பணியாளர்கள் 24 பேரை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வாகனமும் திண்டுக்கல் ரயில் நிலையம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story

