அரசு பள்ளி என்.சி.சி.யில் 24 மாணவர்கள் தேர்வு

அரசு பள்ளி என்.சி.சி.யில்  24 மாணவர்கள் தேர்வு
X
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படைக்கு புதிதாக 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியனின் கமாண்டிங் அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ மற்றும் நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கோபால் ஆணையின்படியும், சுபேதார் மேஜர் கோவிந்த ராவ் ஆலோசனையின் படியும், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், என்.சி.சி.க்கு புதியதாக மாணவர்கள் சேர்க்கை நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் செல்லப்பன், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி தலைமை வகித்தனர். 24 மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியனில் உள்ள சுபேதார் அழகர், பள்ளிக்கு வந்து, மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், எடை அளவு, உயரம், உடலமைப்புகளின் தோற்றம் மற்றும் சிறு உடற்பயிற்சிகள் ஆகியவற்றின்படி தேர்வு செய்தார். மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் வீரநடை, தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி வழங்கப்பட்டு, ஆண்டின் இறுதியில் என்.சி.சி. ஏ சர்டிபிகேட் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழானது ராணுவம், காவல்துறை, ரயில்வே துறை வனத்துறை அக்கினிபாத், அக்னிவீர் மற்றும் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு இரண்டு சதவீத இட ஒதுக்கீட்டை பெற உதவுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மணி, அர்த்தநாரஸ்வரர், மணிகண்டன், கவிராஜ் உடற்கல்வி ஆசிரியை நீலாம்பாள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story