கோவையில் 24 வயது வாலிபர் சடலம் : போலீசார் விசாரணை !

கோவையில் 24 வயது வாலிபர் சடலம் : போலீசார் விசாரணை !
X
ஈஸ்வரன் நகர் பகுதியில் 24 வயது வெங்கடேசன் என்ற வாலிபர் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை, போத்தனூர் அருகே ஈஸ்வரன் நகர் பகுதியில் 24 வயது வெங்கடேசன் என்ற வாலிபர் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சுந்தராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், மது பழக்கம் கொண்ட இவர், முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் தெரியவந்தது. கொலையா, தற்கொலையா அல்லது உடல்நலக்குறைவா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் உறுதியாகும் என தெரிவித்துள்ளனர்.
Next Story