போடியில் இளம்பெண் சந்தேக மரணத்தில் திடீர் திருப்பம் மகளை கொன்று நாடகமாடி தந்தை 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய காவல்துறையினர்.

கொலை
தேனி மாவட்டம் போடியில் நேற்று முன்தினம் பங்காருசாமி குளம் தெற்கு குளக்கரையில் இளம் பெண் சடலமாக இருப்பதாக போடி தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இளம் பெண்ணின் அருகாமையில் தென்னமர விஷ மாத்திரை இருந்த நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டதாக பொதுமக்கள் நம்பிய நிலையில் காவல்துறையினர் பெண்ணின் கழுத்தில் உள்ள காயங்களை கண்டு சந்தேக மரணம் பதிவு செய்து விசாரணை துவங்கினர். விசாரணையில் அந்தப் பெண் சின்னமனூர் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த தங்கையா மகள் பிரவீனா என்பதும் இவர் ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் குழந்தையை தந்த இடம் விட்டு விட்டு தனது காதலன் போடி முந்தலைச் சேர்ந்த மாசு காலை என்பவரிடம் கடந்த 10 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரவீனா திருப்பூரில் உள்ள ஒரு நபரிடம் பழக்கம் ஏற்பட்டு அவரிடம் தொடர்ச்சியாக பழகி வந்துள்ளார் இதனை அறிந்த காதலன் மாசுக் காலை உன்னை கொன்று விடுவேன் என சண்டையிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் பிரவீனா தனது தந்தை தங்கையாவிடம் தன்னை காதலன் மாசு காலை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்ற வேண்டுமென கூறியுள்ளார். மேலும் பிரவீனா திருப்பூரில் உள்ள ஒரு நபரை காதலிப்பதும் அவருக்கு தெரிய வந்துள்ளது.. இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான தந்தை தங்கையா தனது மகள் பிரவீனாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். தந்தை தங்கையா அவருடைய மகன் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் தனது மகள் பிரவீனாவின் முறையற்ற காதல் தான் காரணம் என்று கோபத்தில் இருந்த நிலையில் மகளை கொன்றே விட வேண்டும் என முடிவு செய்து இருசக்கர வாகனத்தில் மார்க்கையன்கோட்டையில் இருந்து முந்தல் காலனிக்கு சென்று தனது மகள் பிரவீனாவை அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு தேனில் இருந்து பேருந்து மூலம் அனுப்பி வைப்பதாக கூறி இரண்டு தினங்களுக்கு முன்பாக இரவு 11 மணி அளவில் தேனி நோக்கி சென்றுள்ளார். போடி சாலை காளியம்மன் கோவில் அருகே உள்ள பங்காரு சாமி குளத்தின் கரையில் இருசக்கர வாகனத்தை மேலே ஏற்றிச் சென்ற தங்கையா தான் மறைத்து வைத்திருந்த தென்னைமர விச மாத்திரையை கரைத்து வலுக்கட்டாயமாக மகள் பிரவீனாவின் வாயில் ஊற்றியுள்ளார் பிரவீனா மருந்தை உட்கொள்ள மறுத்து உசும்ப்பி தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில் தங்கையா தனது மகளின் துப்பட்டாவை பிடுங்கி கழுத்தை சுற்றி நெரித்து கொலை செய்துள்ளார். தனது மகளை கொலை செய்த நிலையில் அவர் தற்கொலை செய்த மாதிரி மாத்திரைகளை ஆங்காங்கே வைத்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.மறுநாள் காலையில் காவல்துறையினர் பிரவீனாவின் பிரேதத்தை கைப்பற்றி சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். காதலன் மாசு காலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் பிரவீனாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருமணம் நிச்சியம் செய்யப்பட்ட ஒரு இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதற்காக போடி முந்தல் காலனி பகுதிக்கு சென்றபோது அந்த இளைஞரின் உறவினர்கள் பிரிவினரின் தந்தை தான் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார் எதற்கு திருமணம் நிச்சயம் செய்த இந்த இளைஞரை கைது செய்து செல்கிறீர்கள் என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு பிரவீனாவின் தந்தை தங்கையா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன் மகள் பிரவீனாவை கொலை செய்ததை தங்கையா ஒப்புக்கொண்டார். 24 மணி நேரத்தில் சந்தேக மரணம் அடைந்த பெண்ணை தந்தையே கொலை செய்திருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் தங்கையாவை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மகளின் தொடர் காதல் பயணம் மற்றும் திருமணத்திற்கு மீறிய உறவு உள்ளிட்டவைகளால் தனது மகனின் கல்யாண வாழ்க்கை தடைபட்ட கோபத்தில் தந்தை மகளை தீர்த்து கட்டிய நிகழ்வு போடியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story