திருவையாறில் ஜூன்.24, ஒரத்தநாட்டில் ஜூன்.27 இல் மக்களுடன் முதல்வர் முகாம் 

திருவையாறில் ஜூன்.24, ஒரத்தநாட்டில் ஜூன்.27 இல் மக்களுடன் முதல்வர் முகாம் 
X
மக்களுடன் முதல்வர் முகாம் 
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுக்காவேரி வி.சி.என் திருமண மண்டபம், கடுவெளி முதியோர் இல்லம், கல்யாணபுரம் ஒன்றாம் சேத்தி கோக்கோஸ் திருமண மண்டபம், வரகூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாம்பெரம்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் வரும் ஜூன் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  இதேபோல், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஈச்சங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆழிவாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சோழபுரம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தென்னமநாடு ராம விலாஸ் உயர்நிலைப்பள்ளி, கண்ணத்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ராகவாம்பாள்புரம் ஆர்சுத்திப்பட்டு சமுதாய கூடம், தொண்டராம்பட்டு (கொத்தையக்காடு) வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆம்பலாப்பட்டு தெற்கு (குடிகாடு) ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வரும் ஜூன்.27 வெள்ளிக்கிழமையன்றும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறும் முகாமில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அனைத்து துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.  காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story