மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 24 ஆயிரத்து 699 பேருக்கு

X
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு 2,217 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 24 ஆயிரத்து 699 பேருக்கு ரூ.143.64 கோடியில் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜேந்திரன் பேசும்போது, பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி, தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மகளிர் அனைவரும் முதல்-அமைச்சருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், டி.எம்.செல்வகணபதி எம்.பி., அருள் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

