விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது

X
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ‘மா” திருவிழா கலசலிங்கம் பல்கலைகழகம், கிருஷ்ணன்கோவிலில் நடைபெற உள்ளதால் ஜனவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்கிறார்.
Next Story

