வடமதுரையில் பாஜக நிர்வாகியின் மகனுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி ரூ.24.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

X
Dindigul King 24x7 |26 Nov 2025 9:05 AM ISTஅரசு வேலை வாங்கித் தருவதாக கூறியவர் கைது
வடமதுரையில் பாஜக நிர்வாகியின் மகனுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி ரூ.24.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது திண்டுக்கல் வடமதுரை பாஜக ஒன்றிய தலைவர் வீரப்பன்(43) இவர் மகன் செல்லப்பாண்டிக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல், மேட்டுப்பட்டியை சேர்ந்த சரவணன், சின்னகாஞ்சிபுரம், பெரியகோட்டையை சேர்ந்த கவுரிசங்கர்(32) உட்பட 5 பேர் ரூ.24.30 லட்சம் பெற்று கொண்டு திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் பெயரில், போலி பணி நியமன உத்தரவை வழங்கினர் பணியில் சேர சென்றபோது, அது போலி உத்தரவு என்பது தெரிந்தது. இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரவணனை கைது செய்தனர் இந்நிலையில் வழக்கு தொடர்புடைய கவுரிசங்கரை வடமதுரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்
Next Story
