பரமத்திவேலூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 246 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.

பரமத்திவேலூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 246 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.
X
பரமத்திவேலூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 246 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பரமத்திவேலூர், மார்ச். 20- நாமக்கல் மாவட்டம், பர மத்தி வேலூர் வட்டம், பிள் ளகளத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக் கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்த லைவர் மருத்துவர் ச.உமா. 246 பயனாளிகளுக்கு ரூ.74.40 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட ஆட்சித்தலைவர் மருத் துவர் ச.உமா, தெரிவித்தா வது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி டும் வகையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் மகளிர் உரிமை தொகைதிட்டம், மகளிருக்கு பேருந்துக ளில் கட்டணமில்லா இலவச விடியல் பயணம், உயர்கல்வி பயில வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக பெண்கள் உயர்கல்வி பயில்வதைஊக் குவித்திட மாதம் ரூ.1,000/வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஏழை,எளியகுழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட் டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மாணவ, மாணவி யர்களுக்கு தாட்கோ மூலம் சுல்வி கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் கடனுதவி, கூட்டுறவு துறை சார்பில் விவசாயி க ளுக்கு விவசாய கடன், நகை கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய திட்டங்கள் ஆகும். பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக் கிடவும், சுய தொழிலை ஊக்குவித்திடவும் தொழில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு இருப்பதற்கு பாதுகாப்பான வீடு தேவை என்பதை கருத்தில் கொண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத் தின் கீழ் ரூ.3.50 இலட்சம் வழங்க உத்தரவிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.204.74 கோடி மதிப்பீட்டில் 5,800 பயனா விகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு கிராமசபை நடத்தப்பட்டு கலை ஞரின் கனவு இல்லம் 2025 26 மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் 202425 ஆகிய இரண்டுதிட் டங்களுக்கு தகுதியான பயனாளிகள் இறுதி செய்யப் பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வந்த நிலையில், பொதுமக்களை தேடி அனைத்து துறை அரசு அலுவலர்களும் அவர்களது கிரா மங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடர்புதிட்டமுகாமினை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி இன்றைய தினம் பரமத்தி வேலூர் வட்டம்பிள்ளகளத்தூர்கிராமத் தில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டு மென்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 246 பயனாளிகளுக்கு ரூ.74.40 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கப்படுகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன் படுத்தி கொண்டு தங்கள் உடல்நலனையும், பொரு ளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனமாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்ச.உமா, தெர வித்தார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் பி.பி.தனராசு, பரமத்தி பேரூராட்சி தலைவர்மணி, பேரூர் செயலாளர் ரமேஷ்பாபு,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா. அருளரசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி. வேளாண் இணை இயக்கு நர் கலைசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இரா மசந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப் புத் திட்டம்) ச.பிரபாகரன், உதவி இயக்குநர் (நில அளவை) இரா.ஜெயசந்தி ரன், பரமத்தி வேலூர் வட் டாட்சியர் ப.முத்துக்குமார், உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் உட்பட பலர் சுலந்து கொண்டனர்.
Next Story