போச்சம்பள்ளியில் ஏலச்சீட்டு நடத்தி, 2.48 கோடி ரூபாய் மோசடி

போச்சம்பள்ளியில் ஏலச்சீட்டு நடத்தி, 2.48 கோடி ரூபாய் மோசடி
போச்சம்பள்ளியில் ஏலச்சீட்டு நடத்தி, 2.48 கோடி ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  25க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில், வடமலம்பட்டியை சேர்ந்த தனபால் என்பவர் ஸ்ரீகுமரன் பைனான்ஸ் என்ற பெயரில், 10 ஆண்டுகளாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அவர், 1 லட்சம், 2 லட்சம், 5 லட்சம் மற்றும், 10 லட்சம் ரூபாய் மாதசீட்டு நடத்தி வந்தார். அதில், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 260க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த, 2022 ஜூன் மாதத்திற்கு பிறகு தனபால் சீட்டுப்பணத்தை ஒழுங்காக வழங்கவில்லை. ஆனால் சீட்டுப்பணம் கட்டி ஏமாந்தவர்களிடம் நான் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என தனபால் கூறிவந்தார். இதை ஏற்காமல் கடந்த, 2023ல் பாதிக்கப்பட்ட 60 பேர் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். எனவே அவரிடம் மாத சீட்டு கட்டி ஏமாந்த, 55 பேரின் ஆவணங்கள் படி அவர்கள் ஏமாந்த, 2 கோடியே, 48 லட்சத்து, 28 ஆயிரம் ரூபாயை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story