வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.49 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

X
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், "ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு ஆவண செய்யுமா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதில் அளித்து பேசியதாவது, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை 309 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 2.49 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் மட்டும் 7 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தபட்டுள்ளன. மேலும், அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அவர் பதில் அளித்தார்.
Next Story

