வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

நிவாரண உதவிகள்

நாசரேத் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. காமராஜர் ஆதித்தனார் கழக பொதுச்செயலாளர் மின்னல் அந்தோணி மற்றும் ஒழுங்கு கமிட்டி தலைவர் வயலா செல்வின் ஆகியோர் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் நாசரேத் பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலருமான ஐஜி தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வளவன்நகர், தடியன் காலணி, மறுகால்துறை ஆகிய ஊர்களில் வீடுகள் இடிந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள், போர்வை, பருப்பு, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஷாம், துணைத் தலைவர் விமல் ஆழ்வை ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஐபெல் ஒன்றிய அவைத்தலைவர் பாம்பே ரவி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் அகஸ்டின், பிரகாசபுரம் கிளை செயலாளர் கிங்ஸ்டன், மூக்குப்பீறி கோயில்ராஜ் இளைஞர் அணி அஸ்வல், ஜெரின், எட்வின், அந்தோணி, ஜெபஸ்டின், ராம்சிங் மற்றும் நண்பர்கள் காமராஜர் ஆதித்தனார் கழக இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story