அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கார்கில் போர் 25-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கார்கில் போர் 25-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கார்கில் போரின் 25-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்க பல்கலைக்கழக வேந்தர் கணேசன் அறிவுறுத்தினார். இதையடுத்து அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் கார்கில் போர் விழிப்புணர்வு கண்காட்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்து, கார்கில் போரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் அவர்களின் பங்களிப்பு, ராணுவவீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கண்காட்சியில் கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களின் தியாகங்கள், பங்களிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை குறிக்கும் வகையில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் 25 பேர் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்த கண்காட்சியை மற்ற கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் டாக்டர்கள் ஜமுனா, ஜெயபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story